கட்டுரைகள்
கீழடி அகழ்வாராய்ச்சி
- October 27, 2019
சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ…
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு
- October 27, 2019
உத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்
- October 27, 2019
தமிழக வரலாற்றில் சித்தன்னவாசல்
- October 27, 2019
தொல்லியலும் இராமாயணமும்!
- October 27, 2019
மேலும் படிக்க
கீழடி அகழ்வாராய்ச்சி
- admin
- October 27, 2019
சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள்...
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு
- admin
- October 27, 2019
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில்நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம...
உத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்
- admin
- October 27, 2019
குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். குடவோலை முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று...
தமிழக வரலாற்றில் சித்தன்னவாசல்
- admin
- October 27, 2019
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் தமிழகத்தின் புதுக்கோடை மாவட்ட்த்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல். இதற்கு, ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அன்னவாசல் என்ற ஊருக்கு முன்னதாக உள்ளது இந்த ஊர். குடைவரைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு, நாம் பேருந்தைவிட்டு இறங்கி 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். சிரமம் பார்க்காமல் நடந்துசென்றால், இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட காலத்தின் சமூகப் பதிவுகளை ஓவியங்களாகவும் குடைவரைக் கலைகளாகவும் தனக்குள் பொத்திவைத்திருப்பதை...
தொல்லியலும் இராமாயணமும்!
- admin
- October 27, 2019
இராமாயணம் எந்த காலத்தில் நடந்தது? அப்படி ஒன்னு நடந்துதா இல்லயா? நம்பலாமா நம்பக்கூடாதா? போன்ற கேள்விகளுக்கு மாற்று கோணத்தில் பதிலளித்துள்ளார் தொல்லியலாளர் H.D.Sankalia. அவர் “The UR (Original)Ramayana or Archaeology and the Ramayana” என்னும் தலைப்பில் சில சுவாரசியமான விடயங்களை அவரது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது கருத்துப்படி 650 இராமாயண கதைகள் உள்ளதாக பட்டியல் இடுகிறார். அதில் மிக தொன்மையாக கருதப்பட்ட இராமாயணத்தை கொண்டு அதில் வரும் கதாபாத்திரங்கள், அணிகலன்கள், ஒருவேளை இராமாயணம்...