இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் – விசாலினி

யார் இந்த விசாலினி ?

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியரின் மகள்  விசாலினி.

அதுமட்டுமா,   தமிழாசிரியர் தமிழ்க்கனலின் பேத்தி.

அல்வாவுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் திருநெல்வேலிதான்– என்று உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர்.

ஐந்து (5) உலக சாதனைகள், பதிமூன்று (13) சர்வதேச கணினி சான்றிதழ்கள் பெற்றவர்.

உலகின் பல்வேறு நாட்டு  அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற இவர் – ஓர் இந்தியர், தமிழர்!

படிப்பில் சாதனை

விசாலினி தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே தொடர்ச்சியாக இரண்டு முறை  டபுள் ப்ரமோஷன் பெற்றவர்.

 ஒன்பதாம் வகுப்பை, பாதியில் நிறுத்திவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நேரடியாக  பி.டெக் (B.Tech) பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்.

 அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தன்னைவிட நான்கைந்து வயது மூத்த மாணவர்களுடன் படித்தாலும் எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகவே திகழ்ந்தவர்.

முக்கியமாக நான்கு ஆண்டுகள் பி.டெக்  (B. Tech) பொறியியல் படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்து 96%  மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.

கணினி துறையில் ஆர்வம்

உலக அளவில், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங்  துறையில், பல பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச கணினி தேர்வுகளை நடத்துகின்றன. பொதுவாக B.Tech,  M.Tech முடித்த மாணவர்கள் கூட, கடினமான இந்த தேர்வுகளை எழுத சிரமப்படுவர்.

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் கடினமான சர்வதேச கணினி தேர்வுகளை தன் 10 வயதிலேயே எழுதத் தொடங்கியவர் விசாலினி.

 பாகிஸ்தான் மாணவர்கள்  சாதனை முறியடிப்பு

அமெரிக்காவின் முன்னணி நெட்வொர்க்கிங் நிறுவனமான  CISCO நடத்தும் CCNA தேர்வில்,  பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது மாணவர் Irtiza Haider சாதனையை – தமிழக மாணவி விசாலினி தன் 10 வயதில் முறியடித்து – “The Youngest CCNA in the World” ஆனார்.

IELTS  தேர்வில் பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வயது மாணவி Sitara Brooj Akbar  சாதனையை, விசாலினி தன்  11 வயதில் முறியடித்து  The Youngest IELTS in the World என்ற உலக சாதனை படைத்தார்.

ரான்சம்வேர் வைரஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே அச்சுறுத்திய  ரான்சம்வேர் கம்ப்யூட்டர் வைரசுக்கு  தீர்வு கண்டவரும் இவரே.

 பிரதமர்,  குடியரசுத்  தலைவர் பாராட்டு

பாரத பிரதமர் நரேந்திர மோடி   அவர்கள்  விசாலினியுடன் உரையாடிய போது,  “விசாலினி, இந்தச் சிறுவயதில், நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான  சேவைதான்” என்று  2015-ம் ஆண்டிலேயே, பாராட்டிவிட்டார்.

குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களது பாராட்டை தன் மூன்று வயதிலேயே பெற்றவர் விசாலினி. கம்ப்யூட்டர் துறையில் இவரது சாதனைகளை அறிந்து மீண்டும் நேரில் அழைத்து பாராட்டினார் டாக்டர் அப்துல்கலாம்.   இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் விசாலினி முக்கியப் பங்காற்றுவார் என்று அன்றே வாழ்த்தினார். டாக்டர் அப்துல்கலாம் மறைவுக்கு பிறகு, அவரது முழு உருவச் சிலையையும் விசாலினி திறந்து வைத்தார்.

????????????????????????????

இஸ்ரோ அழைப்பு

விசாலினியின் திறமையை அறிந்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான  இஸ்ரோ — இஸ்ரோவில் உரையாற்ற வருமாறு 15 வயது மாணவி  விசாலினிக்கு அழைப்பு விடுத்தது.

இதையடுத்து இஸ்ரோவிற்குச் சென்றார் விசாலினி. அங்கு இஸ்ரோ இயக்குனர் உட்பட எழுநூறுக்கும் (700+)  மேற்பட்ட  விஞ்ஞானிகள்  மத்தியில் புதிய தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அங்கு விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.  இஸ்ரோ இயக்குனர்  மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் உட்பட விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று standing ovation கொடுத்து விசாலினிக்கு மரியாதை செய்தனர். எதிர்காலத்தில்,  இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் விசாலினி முக்கியப்  பங்காற்றுவார் என்று இஸ்ரோ இயக்குனர் பாராட்டினார்.

மேலும் செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளையும் விசாலினிக்கு பரிசளித்தார்.

இந்திய அரசு புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டில்  மங்கள்யான் செயற்கைக்கோள் படம்  இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றில் முதன் முறையாக , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில்
15 வயது  மாணவி ஒருவர், விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியது இதுவே முதன் முறை.  அந்தப்  பெருமை  தமிழக மாணவி  விசாலினியையே சேரும்.

???? இஸ்ரோவில் ஆராய்ச்சிப் பணி ????

விசாலினியின் திறமையை அறிந்த இஸ்ரோ நிறுவனம் இவருக்கு ஓர் ஆராய்ச்சிப் பணியை வழங்கியது.  இஸ்ரோ வரலாற்றில் 15 வயது மாணவிக்கு ஓர் ஆராய்ச்சிப் பணி வழங்கப்பட்டது அதுவே முதன்முறை.

இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணியை 35 நாட்களில் முடித்து நம் இந்திய நாட்டிற்கு சமர்ப்பித்தார் விசாலினி.  அந்த தொழில் நுட்பத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டது தனிச்சிறப்பு.

இஸ்ரோ இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “விசாலினி தனது வயதுக்கு  மிஞ்சிய சவாலான செயல்களை செய்ய வல்ல அபார அறிவாற்றல் பெற்றவர்” என்று பாராட்டினார்.

????????????????????????????

 சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்

உலகிலேயே இல்லை  இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினி,  11 வயது குழந்தையாக இருக்கும் போதே, 12 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்றி, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை  நிலை நாட்டியவர்.

சர்வதேச கணினி மாநாடுகளில்–பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 5000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி தங்கள் இருக்கையை முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் விசாலினியோ, 11 வயது குழந்தையாக இருக்கும்போதே, 12 சர்வதேச கணினி மாநாடுகளிலும்  70 முதல் 80   நாட்டு அறிஞர்கள் மத்தியில், தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர். உலகின் எந்த ஒரு குழந்தைக்கும் கிடைக்காத பெருமை இது.

She has been invited as the Chief Guest for 12 International Conferences and Delivered Keynote Speeches there.

 கூகுள், TEDx

கூகுள் (Google) நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய சிறுமி விசாலினியைப் பார்த்து, பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர்.  அங்கு  The Youngest Distinguished Google Speaker  என்ற பட்டமும் பெற்றார்  விசாலினி.

 TEDx   சர்வதேச மாநாட்டில் இரண்டு முறை தலைமை உரை ஆற்றிய  விசாலினி  11 வயதிலேயே,  The Youngest TEDx  Speaker  என்ற பட்டமும் பெற்றார்.

????????????????????????????

ஆராய்ச்சியாளராக…..

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்,

1)      மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் (- 50 டிகிரி C) தட்பவெப்பத்தில் உறைய வைக்கும் குளிரில், இமயமலையில் சியாச்சின் பள்ளத்தாக்கில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக, புதிய சாதனம்.

2)      இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பிற்கான உபகரணம்.

3)      மேலும், மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் வாழ்க்கைத் திறனை நியூரல் நெட்ஒர்க்ஸ் மூலம்  மேம்படுத்துதல்.

— என விசாலினியின் பல புராஜெக்ட்கள்,  இனி வரும் காலத்தில் கணினி உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழ்நாள் லட்சியம்

தன் அறிவுத்திறனால் உலகையே தன் வசம் திரும்பிப் பார்க்கவைத்த, விசாலினி,  திருநெல்வேலி அரசு பள்ளி தமிழாசிரியர், தமிழ்க்கனலின் பேத்தி  ஆவார். 

தமிழக மாணவி விசாலினியிடம் பேசிய போது “நான் பிறந்த என் இந்திய நாட்டிற்காக, நம் இந்திய நாட்டிற்காக, நோபல் பரிசு பெற்றுத் தரவேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம்!” என்றார்.

2 Reviews

Traurge
1

how much generic for cialis 5 mg cost

buy generic cialis online Use specific closed ended questions

Thoulky
1

cialis and hair loss

Patients are at increased risk of infection and steroids should not be given. Bsqcbh https://newfasttadalafil.com/ - Cialis is there a generic cialis available Dnfotv https://newfasttadalafil.com/ - cialis without prescription Canadian Propecia Wvxzvj

Write a Review

admin

Read Previous

கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’

Read Next

தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *