தொல்லியலும் இராமாயணமும்!

இராமாயணம் எந்த காலத்தில் நடந்தது?

அப்படி ஒன்னு நடந்துதா இல்லயா? நம்பலாமா நம்பக்கூடாதா? போன்ற கேள்விகளுக்கு மாற்று கோணத்தில் பதிலளித்துள்ளார் தொல்லியலாளர் H.D.Sankalia. அவர் “The UR (Original)Ramayana or Archaeology and the Ramayana” என்னும் தலைப்பில் சில சுவாரசியமான விடயங்களை அவரது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது கருத்துப்படி 650 இராமாயண கதைகள் உள்ளதாக பட்டியல் இடுகிறார். அதில் மிக தொன்மையாக கருதப்பட்ட இராமாயணத்தை கொண்டு அதில் வரும் கதாபாத்திரங்கள், அணிகலன்கள், ஒருவேளை இராமாயணம் நடந்திருந்தால் அது இரும்பு காலத்தில் நடந்திருக்கலாம் என்கிறார். ஏனெனில் இராமர் பயன்படுத்திய வில்/அம்பு/ கத்தி போன்றவைகள் இரும்பினால் செய்யப்பட்டது என்பதை குறிப்பிடுகிறார். இராமாயணத்தில் இராமர்- இலக்குவன் போன்றோர்களின் ஆயுதங்களை Kalayasa, Karsnayasa,Ayasa என்ற வார்த்தைகளில் குறிப்பிடுவதாகவும். Ayasa என்பதை இரும்பு என கூறுகிறார். சீதையின் ஆடை சில்க்யில் செய்ததாகவும். இவ்வகை ஆடையை Kauseya (China silk) என வால்மீகி குறிப்பிடுவதாகவும். ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட இராமாயணங்களில் Kshauma (Linen or fine cotton) என தவறான எழுதிவிட்டார்கள் என்றும் சொல்கிறார்.

இராமர் தனது மோதிரத்தை அனுமனிடம் கொடுத்து சீதையிடம் அடையாளப்படுத்தும் காட்சியில் வர்ணிக்க படும் மோதிரம் பெயரோ அல்லது signed (design) இருப்பதுபோல் வர்ணிக்க படுவதால். தொல்லியல் ரீதியில் மோதிரங்கள் சிந்துவெளி காலம் தொட்டே கிடைத்தாலும் அதில் பெயர்கள் இல்லை, designகள் இல்லை. Indo-Greek தான் இந்தியாவிற்கு மோதிரத்தில் எழுத்துமுறையை அறிமுகபடுத்தினார்கள் எனவும் கூறுகிறார். ஆதலால் இராமாயணம் கிமு 200 க்கு பின்னாக இருக்கு வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவிக்கிறார். அடுத்ததாக லங்கா மற்றும் கிட்கிந்தா நகரை கவிஞர்கள் வர்ணித்த விதங்களை பார்த்தால் அவர்கள் தெனிந்தியாவை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்கிறார். அதற்கு உதாரணமாக ஜடாயு மற்றும் வாலி இறந்தபின் செய்யும் சடங்குகள் ஆரிய முறையில்/ வேத முறையில் இருக்கிறது என்றும் தென்னிந்தியாவில் வரலாற்று காலம் வரையிலும் நடுகல், குத்துக்கல் , தாழியில் புதைத்தல் போன்ற வழக்கங்கள் மட்டுமே இருப்பதால் அந்த வர்ணிப்புகள் எல்லாம் புலவர்கள் கற்பனை என்கிறார்.

அயோத்தி/ இலங்கையில் பெரிய கோபுரங்கள், விமானங்கள், சிகரங்கள் இருப்பதாக கூறுவதால், இவைகள் எல்லாம் இந்தியாவில் மிக பிற்காலத்தில் (குறிப்பாக தென்னிந்தியாவில்) வந்ததாகவும். அவை போக இவற்றை புத்த ஸ்தூபி என கொண்டாலும் அதை பற்றி குறிப்புகள் வேறு எங்குமே இல்லை என்றும். ஆனால் சைத்தியம் பற்றி மட்டும் ஒரு இடத்தில் வருவதாகவும் சொல்றார். கடைசியாக இராமாயணத்தில் சொல்ற நாள், நட்சத்திர குறிப்புகளை வைத்து பஞ்சாங்கத்தில் பார்த்தால் ,இராமாயணம் கிபி 484 க்கு முன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்.

அதுபோக இராமாயணத்தில் வரும் இலங்கை இப்போதைய ஸ்ரீ லங்கா இல்லை. அது மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் க்கு அருகே இருக்கும் இந்திரனா மலை. அங்கு தான் இலங்கை இருந்தது என்கிறார். முண்டா பழங்குடிகள் பேசும் மொழியில் லங்கா என்பது தொலை தூரம் என்ற பொருளில் வருதாம். அது இல்லாமல் கோந்த் பழங்குடிகள் தங்களை இராவண வம்சம் என சொல்லிக்கொள்வதால் இது இரு பழங்குடிகளுக்கு நடுவில் இராமர் (ஆரியம்) வந்து முடிச்சு விடுவதாக எழுதுறார். கோசாம்பி, சோன்பூர், பிகார், மேற்கு வங்க ஆய்வுகளில் சுடுமண் பானைகள், அவர்கள் உண்ட உணவுகள் அனைத்தும் மாடு, ஆடு, பன்றி போன்ற விலங்குகளை தான். திடீர் என முளைத்த இரும்புகால மனிதர்கள் இவர்களின் நாகரீக/ பழக்கவழக்கங்களை முற்றிலும் ஒழித்ததாக சொல்கிறார். ராட்சசர்கள்/ வாணரங்கள் எல்லாம் ஆதிவாசிகளாகவும். வாணரங்கள் இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும். அவர்களும் இராட்சசர்களும் Sal tree (நாகலிங்க மரம்) கொண்டே போரிட்டார்கள். இந்த வகை மரங்கள் தென்னிந்தியாவில் கிடையாது என்றும். வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே வளரும் என்றும் சொல்கிறார்.

வாலியை கொன்ற பின் இராமர் ஒரு பஞ்ச் டயலாக் சொல்றாராம். அது “All these land belongs to Ikshvakus and it is my duty to punish the perpetrator of adharma”.

Source: H.D.Sankalia – Aspects of Indian History And Archaeology Vol 2 edited by Gupta.

93 Reviews

Write a Review

admin

Read Next

யாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *