விக்ரம் லேண்டர் என்னவானது?

நிலவுக்கு அனுப்பிய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

நிலவுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது.

அக்டோபர் மாத துவக்கத்தில் விக்ரம் லேண்டர் இறங்கியதாக கருதப்பட்ட இடத்தின் புகைப்படத்தை நாசா விண்கலம் எடுத்து இருந்தது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் தெரியவில்லை.

நிலவின் நிழல் பகுதியில் விக்ரம் லேண்டர் இருந்து இருக்கலாம் அல்லது அந்த இடத்தில் இருந்து வேறு எங்காவது விக்ரம் லேண்டர் தரை இறங்கி சேதம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நிலவில் இறங்குவதற்கு முன்பு 2.1 கி. மீட்டர் தொலைவு இருக்கும்போது லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து இஸ்ரோ முயற்சித்து வந்தது. அதில் இருக்கும் பேட்டரி சூரிய ஒளியின் வெப்பத்தை எடுத்துக் கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. 14 நாட்கள் மட்டுமே இயங்கி வந்த பேட்டரி பின்னர் செயலிழந்தது. நிலவின் மிகவும் குளிரான பகுதியில் லேண்டர் விழுந்து, உறைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாசா இதுவரை இரண்டு முறை முயற்சித்துள்ளது. ஆனால், லேண்டர் இருக்கும் இடத்தை அதனால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. நிலவைச் சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் கடந்த செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் விக்ரம் லேண்டர் இறங்கியதாக கருதப்படும் இடத்தை கடந்து சென்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் லேண்டர் தெரியவில்லை.

நாசாவின் ஆர்பிட்டரின் முதல் முயற்சியில் நிலவின் தென் துருவத்தில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக, பெரிய நிழல் இருந்து இருப்பதும் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் கூட நாசாவின் ஆர்பிட்டரால் லேண்டரை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம்.

0 Reviews

Write a Review

admin

Read Previous

யோகா பாட்டி கோவை நானம்மாள்

Read Next

மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *