குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

நியூயார்க்: தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குத்துவிளக்கேற்றி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இணிப்பு, பலகாரங்களை பரிமாறிக் கொண்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் தங்களது உற்றார், உறவினர்கள், நண்பர்களை நேரில் சந்தித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

இந்திய மக்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குத்து விளக்கேற்றி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தீப ஒளி திருநாளை கொண்டாடும் மக்களுக்கு அந்த கொண்டாட்டம் மகிழ்ச்சியுடனும், ஆசிர்வதிக்கப்பட்டதுமாக அமைய நானும், மெலினாவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தீபாவளி மற்றும் மகிழ்ச்சிமிக்க வெற்றிகரமான வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1531 Reviews

Brianped
1

Thank you

Nice internet site you have got right here.

Write a Review

admin

Read Previous

மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *