யோகா பாட்டி கோவை நானம்மாள்

நானம்மாளிடம் கற்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • தாத்தா மன்னார்சாமியிடம் நானம்மாள் யோகா கற்றுக்கொண்டார்.
  • நானம்மாளின் மாணவர்கள் சர்வதேச யோகா போட்டிகளில் வென்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே போதும், சிறிய எரும்பு கூட அவரது பெருமைகளை பறை சாற்றும். அந்த அளவுக்கு யேகாவில் கை தேர்ந்தவர். 99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல் யோகா செய்து வந்தவர்.

கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வந்த நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தார்.

இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக செய்யத்துவங்கிய நானம்மாள், அதை 98 வயது கடந்த போதிலும் விடுவதாயில்லை.

இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல், இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின் யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை. இவர்களுக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர்.

நானம்மாளிடம் இதுவரை பல பேர் யோகா கற்று பயனடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், நானம்மாளின் மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசு 2018ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஏற்கனவே நானம்மாள் குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Write a Review

admin

Read Previous

10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடக்கம்- விழாக் கோலம் பூண்ட சிகாகோ!

Read Next

விக்ரம் லேண்டர் என்னவானது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *